மார்வாடி இளைஞர் சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் நடைப்பெற்ற செயற்கை கை-கால் பொருத்தும் 2 நாள் இலவச முகாமினை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தொடங்கி வைத்தார்.
மார்வாடி இளைஞர் சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் 3-ஆம் ஆண்டு செயற்கை கை- கால் பொருத்தும் 2 நாள் இலவச முகாம் பாலாஜி நகரில் உள்ள ஸ்ரீ விஜயமதி ஜெயின் பவனில் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் தீப் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் மனீஷ், பொருளாளர் ரோஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்த முகாமில் புதுச்சேரி மற்றும் கடலூர்,விழுப்புரம், திண்டிவனம் உட்பட தமிழக பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments