நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் விழிப்புணர்வு பேரணியை துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
இந்திய நுண்ணுயிரியலாளர் சங்கம், புதுச்சேரி கிளை சார்பில், கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் இன்று
நடைபெற்ற நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள, பல்வேறு மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், அரசு பொது மருத்துவமனையின் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் செவ்வேள், ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இதில் ஏராளமான மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் கடற்கரை சாலையில் தொடங்கிய இந்திய விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கடற்கரையை வந்தடைந்தது.
No comments