புதுச்சேரி வந்துள்ள காலபந்து ப்ரீஸ்டைல் வீரர் லோகன்,சுற்றுலா பயணிகள் மற்றும் வீரர்களுக்கு ப்ரீஸ்டைல் முறையை இலவசமாக கற்றுக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரெஞ்சு கால்பந்தில் ப்ரீஸ்டைலர் வீரராக திகழ்பவர், புதுச்சேரியின் மண்ணின் மைந்தர் லோகன். இவர் இந்தியா வந்துள்ளார் புதுச்சேரியில் 3 நாட்கள் தங்கும் இவர் கால் பந்தாட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகிறார். முதலாவதாக கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகத்தின் அருகே சுற்றுலா பயணிகள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கும் கால்பந்தாட்ட நுணுக்கங்களையும் வித்தைகளையும் கற்று தந்தார்.இதனை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் விளையாட்டு வீரர்களும் ஆர்வத்துடன் பயின்றனர். வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கால்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுக் கொண்டனர்.காலால் பந்தை தட்டி மேலெழுப்பி விளையாடியது அதை கற்று தந்தது பலரையும் கவர்ந்தது.
இதனை ஏராளமான வெளிநாட்டவரும் உள்ளூர் மக்களும் கண்டு பாராட்டியதுடன் தங்களது செல்போனில் ஆர்வத்துடன் படம் பிடித்தனர். லோகன் சர்வதேச அளவில் சிறந்த 8 உலக ப்ரீஸ்டைல் கால்ப்ந்து வீரராக உள்ளார். அத்துடன் உலகின் மிக ஸ்டைலான ப்ரீஸ்டைலாகவும் உள்ளார்.
No comments