சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் நேரில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு..
ஃபெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால் மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன வீராம்பட்டினம் புதுகுப்பம் நல்லவாடு ஆகிய மீனவ கிராமங்களையும் மணவெளி, பூரணாங்குப்பம் தவளக்குப்பம் அபிஷேகப்பாக்கம் டி என் பாளையம் ஆகிய பகுதிகளுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம் ஆர் நேரில் சென்று மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உடனடியாக மழை நீரை வெளியேற்ற அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அபிஷேகப்பாக்கம் டி என் பாளையம் என் ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.
இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை துணை ஆட்சியர் வடக்கு தாசில்தார்கள் பிரிதிவி, அருண், காவல்துறை கண்காணிப்பாளர் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் உதவிப் பொறியாளர் இளநிலை பொறியாளர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.
No comments