தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசியில் பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும், பாலிசிதாரர் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், 1.10.2024 நடைமுறைப்படுத்தப்படட ரீபைலிங் முறையில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், குறைந்தபட்ச பாலிசி ரூ.1 லட்சம் என்ற முறை தொடர வேண்டும், அனைத்து பாலிசிகளிலும், பாலிசிதாரர் வயது அதிகபட்சம் 65 ஆக உயர்த்த வேண்டும், பாலிசிதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் புதிய பாலிசி முறையை ரத்து செய்து 30.9.2024க்கு முன்பு இருந்த பாலிசி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், மாத பிரிமியத்தை பழைய இசிஎஸ் தவனை முறையே தொடர வேண்டும், முகவர் கமிஷன் பழைய நடைமுறையே தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி லியாபி முகவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த முகவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். அருள்பாலசிங் முன்னிலை வகித்தார். அகில இந்திய லியாபி செயற்குழு உறுப்பினர் சகாயராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜா சாமுவேல், பொருளாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments