அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை கல்வித்துறை பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் தொடங்கி வைத்தார்..
புதுச்சேரி பெத்துச்செட்டிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை தமயந்தி ஜாக்குலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் வட்டம் ஒன்றின் பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் கலந்து கொண்டு கண்காட்சியினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் அறிவியல், கணிதம், புவியியல் போன்ற 300க்கும் மேற்பட்ட காட்சிப் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பண்டைய காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள், தபால் தலைகள்,ரேடியோ, விவசாயக் கருவிகள் போன்றவையும் இடம்பெற்றன. இக்கண்காட்சியினைப் பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு மாணவர்களை வெகுவாகப் பாராட்டினர். இதில் கலந்து கொண்ட அனைத்து மணவர்களுக்கும் ரோட்டரி கிளப் ஆஃப் எலைட் சார்பாகப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
No comments