இந்தியாவில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதற்கான பல திட்டங்களை வகுத்து தந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்தான்.!!
மயிலாடுதுறையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளாராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். கலந்துகொண்டு 403 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 21 இலட்சத்து 80 ஆயிரத்து 20 மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கி பேசுகையில்.
எல்லா அடித்தட்டு மக்களும் உயர்வதற்காக இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய திட்டங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றது. அந்த அடிப்படையில், இந்தியாவினுடைய முதல் வேளாண் கூட்டுறவு சங்கம் 1904ல் தமிழகத்தில் தொடங்கப்பட்டு இந்தியாவிற்கே அடித்தளமாக அமைந்தது இந்த கூட்டுறவு வேளாண் சங்கம். இன்றைக்கு தமிழ்நாட்டில் 23,661 வேளாண்மை சங்கங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. ரூ.35 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடன் வழங்கி, தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இதனை பாதுகாத்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். விவசாயிகளின் மேம்பாட்டிற்காக இலவச மின்சாரம் பலகோடி ரூபாய் விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி என நிதி ஒதுக்கீடு, 1989-ல் கலைஞர் மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் பெற்று பொருளாதாரத்தில், சமுதாயத்தில் உயர்வதற்கான வழிவகை செய்தார். தனிமனிதனுக்காக இந்த சமுதாயம், சமுதாயத்திற்காக இந்த தனிமனிதன். இந்த 2 பேரும் இணைந்து பணியாற்றக்கூடிய இந்த அமைப்பு தான் கூட்டுறவு அமைப்பு. மற்ற மாவட்டங்களை விட இந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு போன்றவர்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நாம் குறித்த காலத்தில் கடன்களை பெற்றுத்தர வேண்டும். அதேபோல், நகைக்கடன். ஒரு பவுனுக்கு ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. அதுவும், குறித்த காலத்தில் கடன்களை திரும்ப செலுத்தினால் வட்டி இல்லாமல் பெற முடியும். இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள் இந்த கூட்டுறவு சங்கங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன் மூலமாக மாணவர்கள் படிப்பதற்கு கல்வி கடன்கள் வழங்குகின்ற திட்டத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் . இந்த ஆட்சிக்காலத்தில் 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களின் நகைக்கடன் ரூ.5 ஆயிரத்து 13 கோடியையும், மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்று கடன்களை திருப்பி செலுத்த முடியாத ரூ. 2 ஆயிரத்து 756 கோடியை தள்ளுபடி செய்த இந்தியாவின் ஒரே முதலமைச்சர் நம் முதல்வர் 46 இலட்சத்து 72 ஆயிரத்து 849 விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 852 கோடியை பயிர்கடனாக வழங்கியுள்ளார். இந்தியாவில் பல துறைகளில் முன்னோடியாக இருந்து வருகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்து தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். பின்னர், வார விழாவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 21 - மாணவ, மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பரிசு வழங்கினார். முன்னதாக கூட்டுறவு சங்க கொடியை எற்றி வைத்த அமைச்சர் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
No comments