சீர்காழியில் ரூ. 55 லட்சம் செலவில் நடைபெற்று வரும் தாமரைக் குளம் சீரமைப்பு பணிகளை அகற்றி விரைந்து முடித்திட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளுக்கு உத்தரவு..
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீநகர் வடிகால் வாய்கால்,ஊழியக்காரன் தோப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக ஜெ.சி.பி இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி வாய்க்கால் தூய்மைப்படுத்துவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி ஆய்வு செய்தார். ஊரக,நகர பகுதிகளில் மழைநீர்; வடிவதற்குரிய வாய்க்கால்களை உடனடியாக ஆய்வு செய்து,வடிகால் வாய்க்கால்களில் மழைநீர்; செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து சீர்காழி 14 வது வார்டில் உள்ள தாமரைக் குளம் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 55 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது பணிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் முழுமை அடையாமல் இருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டார் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை அமைக்கும் பணிகளை விரைவில் முடித்திட அதிகாரிகளுக்கு ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.
No comments