சீர்காழியில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசின் "கலை திருவிழா" பள்ளி மாணவ மாணவிகள் நடனம் நாடகம் இசை என தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தல்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்ததாவது,
இங்கு நடக்கும் போட்டிகளை பார்க்கும் பொழுது மனம் அமைதி அடைகிறது. முன்னர் வாழ்ந்த தமிழர்கள் உழைப்பு, கலை என்று வாழ்ந்து வந்தனர். உழைக்க வேண்டும் மனதை அமைதி அடைய செய்ய வேண்டும். அதற்காக ஏற்பட்டது தான் இந்த கலை. கலைக்கு தமிழர்கள் முன்னோடியாக திகழ்ந்து வந்தனர். அதில் பாரம்பரிய கலைகள் நிறைய இருக்கின்றன.
தமிழ்நாடு அரசானது, இந்த கலைகளை மீட்டெடுப்பதற்காக மாணவர்களுக்கு இந்த கலையை கற்றுக் கொள்வதற்காக அவர்களுடைய பல்வேறு திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவும் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இசை, ஓவியம் போன்றவற்றில் நாம் கலந்து கொள்வதினால் மனம் அமைதி அடையும். ஆகவே சிறு வயதிலிருந்தே இந்த திறமைகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கல்வியோடு கலையை சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, நடுநிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் பங்கேற்று நடனம், நாடகம், இசை ஓவியம் என பல்வேறு விதமான போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
No comments