குழந்தைகளுக்கு உணவு சமைக்க தேவைப்படும் பாத்திரங்கள் அனைத்தும் அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கன்வாடி மையம்
வாடகை கட்டிடம் இல்லாமல் அனைத்தும் அரசு கட்டிடமாக கட்டி தர நடவடிக்கை எடுக்கவும் அடிப்படை வசதிகளை செய்து தரவும் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க செலவுத் தொகையை உயர்த்தி தர வேண்டும் எனவும் உணவு சமைக்க தேவைப்படும் பாத்திரங்கள் அனைத்தும் தமிழக அரசே மையங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments