மாபெரும் இருதயம் மற்றும் மகளிர் பொது மருத்துவம் ஆலோசனை முகாம்..
சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் எஸ்.கணேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கம் மருத்துவ இயக்குனர் எம்.பழனியப்பன் வரவேற்றார்.,மாவட்ட சுகாதாரம் மருத்துவ பணிகள் இயக்குநர் வி.பி.பானுமதி, சீர்காழி அரசு தலைமை மருத்துவர் அருண்ராஜ்குமார், ரோட்டரி துணை ஆளுநர் சி.பாலாஜி,நகர்மன்ற உறுப்பினர் நித்தியா தேவி பாலமுருகன், நர்சிங் கல்லூரி இயக்குநர் எஸ்.ராதா முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட ஆலோசகர் டாக்டர்.ஆர்.பழனிவேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை துவக்கிவைத்து பேசினார். முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு இ.சி.ஜி. சர்க்கரை அளவு, இரத்த கொதிப்பு போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பரிந்துரை செய்தன. இதில் ரோட்டரி துணை தலைவர் நடராஜன், பொருளாளர் நாசர், முன்னாள் தலைவர்கள்,செயலாளர்கள்,உறுப்பினர்கள் பங்கேற்றனர்.நிறைவில் ரோட்டரி செயலாளர் ஜெ.ராஜிக் நன்றிக்கூறினார்.
No comments