Breaking News

அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தாய் சேய் சேவை நிகழ்ச்சி கர்ப்பிணி மற்றும் வயதானவர்களுக்கான இலவச வாகனச் சேவை.!!


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சீர்காழி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்காக தாய் சேய் சேவை எனும் இலவச வாகன வசதி தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழக மாவட்ட தலைவர் குட்டி.கோபி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் கமல், ஒன்றிய செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில், நான்கு கார், நான்கு ஆட்டோ ஆகிய இலவச வாகன சேவைகளை தொடங்கி வைத்தனர். சீர்காழியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரையில் வசிக்கும் கர்ப்பினிப் பெண்கள், வயதானவர்கள் ஆகியோர் அவசர தேவைக்கு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் இலவசமாக வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இந்த சேவை பயன்படுத்திக் கொள்ள அதற்கான தொடர்பு எண்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர்.

No comments

Copying is disabled on this page!