தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி,சர்க்கரை மற்றும் மானிய விலையில் பொருட்கள் வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து அதிமுக சாலை மறியல்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிவித்த இலவச அரிசி சர்க்கரை மற்றும் ரூ.500 மதிப்புள்ள மானிய விலையிலான உணவுப்பொருட்கள் வழங்காத ஆளும் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன்,
புதுச்சேரியை ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு பண்டிகை காலத்தில் அறிவித்த அறிவிப்புகளை கூட செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றும் மக்கள் விரோத அரசாக உள்ளது. 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை இலவச அரசியும், சர்க்கரையும் வழங்கப்படவில்லை என்ற அவர்,அறிவித்த பண்டிகை கால உணவ பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் கூட இந்த அரசு முழு தோல்வி கண்ட அரசாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
No comments