முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாள்: தூத்துக்குடியில் காங்கிரசார் மரியாதை..
தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107 ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான சந்திரபோஸ், வடக்கு மண்டல தலைவர் சின்னகாளை, கிழக்கு மண்டல தலைவர் மிக்கேல், தெற்கு மண்டல தலைவர் ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கட் சுப்பிரமணியன், மாவட்டத்துணை தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ஜோபாய், சிவன் யாதவ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, குமாரமுருகேசன், வார்டு தலைவர்கள் பிரகாஷ், கருப்பையா, பிராங்ளின், ஜெபமாலை, வேம்படி லிங்கம், தனுஷ், மாரியப்பன், மகாலிங்கம், வில்சன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments