தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக கனமழை கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை ..
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட தரங்கம்பாடி, செம்பனார்கோவில் ஆக்கூர், சங்கரன்பந்தல், உட்பட தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னகுடி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதியிலிருந்து தற்போது வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து தரங்கம்பாடி பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
No comments