Breaking News

புதுச்சேரியில் முதல் முறையாக சீரடி செல்லும் ஏழை எளிய மக்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ரயில் நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார்..

 


புதுச்சேரியில் முதல் முறையாக ஏழை எளிய மூத்த குடிமக்கள் 200 நபர்கள் சீரடி யாத்திரை இலவசமாக அழைத்து செல்லும் விழா புதுச்சேரி இரயில் நிலையத்தில் நடைபெற்றது. சமூக சேவகரும் திரைப்பட புகழ் ஹம்ச விர்தன் மற்றும் இண்டெர்நேஷ்னல் சீரடி சாய் பாபா பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மூத்த குடிமக்களை இலவசமாக சீரடி சாய் பாபா தரிசனம் புதுச்சேரி இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டனர்

இவ்விழா புதுச்சேரி இரயில் நிலையத்தில் பயணிகளை வழி அனுப்பும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், திரைப்ப்பட புகழ் ஹம்ச விர்தன், சமூக சேவகர் டாக்டர் ஸ்ரீ வர்மா-ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை இயக்குநர்). சாய் சேவகன் டாக்டர். சாய் சுதாகர் (இண்டெர்நேஷ்னல் சீரடி சாய் பாபா அறக்கட்டளை நிறுவனர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக புடவை, வேஷ்டி, துண்டு, ஸ்னாக்ஸ் அவர்களுக்கான உபகரணங்கள் அனைத்தும் இண்டெர்நேஷ்னல் சீரடி சாய் பாபா அறக்கட்டளை மூலமாக வழங்கி அவர்களை சீரடி பயணம் அனுப்பி வைத்தனர்.

இவ்விழாவின் ஏற்பாட்டை இண்டெர்நேஷனல் சீரடி சாய் பாபா பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் கோதண்டராமன் தினேஷ் பிரியன், சந்தோஷ் குமார், ராஜ், இராமச்சந்திரன், சத்யசீலன், காமேஷ், லூகாஸ் ஆகியோர்கள் செய்திருந்தனர்.

No comments

Copying is disabled on this page!