தூத்துக்குடி வருகைதரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும் என கட்சியினருக்கு அமைச்சர் கீதாஜீவன்.
தூத்துக்குடி சட்டபேரவை தொகுதி திமுக பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கட்டளையுடன் கூடிய உத்தரவை வழங்கியது மட்டுமின்றி தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் அறிவுரைகளுடன் கூடிய கட்டளைகளை பிறப்பித்துள்ளார். அவற்றை நிறைவேற்றும் இடத்தில் பாகமுகவர்களாக தாங்கள் உள்ளீர்கள்.
இதனை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் பணிபுரிய வேண்டும். தேர்தல் தினத்தின்போது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக செயல்படுபவர்கள் நீங்கள்தான் என்பதை அறிவோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். நாம் அதனை கடந்து நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓவ்வொரு பூத் கமிட்டியிலும் இருக்கும் பாக முகவர்கள் 10 பேரும் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். உங்களது பட்டியல் தலைமைக்கு வழங்கப்படும். அங்கிருந்தே உங்களை தொடர்பு கொண்டு பேசும் சூழ்நிலை இருக்கும்.
புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் வீட்டு பிள்ளைகளின் பெயர்களையும் விடுபடாமல் சேர்க்கவேண்டும். வரும் 13ஆம் தேதி இரவு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமது மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக வருகைதருகிறார். அன்றைய தினம் அவருக்கு மாவட்ட எல்லையான பந்தல்குடி விலக்கு அருகில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 14ஆம் தேதி காலை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் அவர், பின்னர் மாலையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஏழைஎளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்குகிறார். இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாநில இளைஞர் அணி துணை செயலாளரும், தூத்துக்குடி தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான இன்பா ரகு, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் சுசீ ரவீந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர அவைத்தலைவர் ஜேசுதாஸ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிங்கம், ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜோசப், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், செல்வின், பிரவீன்குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரூபஸ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மகளிர் அணி கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளாகள் அருணாதேவி, நாகராஜன், வட்டபிரதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, அருணகிரி, அற்புதராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments