பாகூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் தாசில்தார் கோபாலாகிருஷ்ணன் தலைமையில் அகற்றப்பட்டது.
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள்
பாகூர் கண்ணிகோயில் சாலையில் உள்ள நடைபாதை மற்றும் ஆக்கிரமிப்பு படிக்கட்டுகள், தடுப்பு கட்டைகள் உள்ளிட்டவைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு ஒரு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் துணையுடன் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments