Breaking News

சீர்காழியில் சுமார் 7 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு..

 


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி கைவிலாஞ்சேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தினை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த இடத்தினை தனி நபர்கள் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார் . இதனால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த இடத்தினை அரசு மீட்க கோரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கைவிலாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோட்டாட்சியர் சுரேஷிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கைலாஞ்சேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணை போன அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு அலுவலகம் உள்ளிட்ட அலுவலக கட்டிடம் கட்ட முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!