திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனகர்த்தர் ஞானரத யாத்திரை புறப்பாடு:-
திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி ஆறு நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், ஆத்மார்த்த மூர்த்திகளான சொக்கநாத பெருமானுடன் குரு லிங்க சங்கம ஞான ரத யாத்திரையாக ஆதீனத் திருமடத்திலிருந்து புறப்பட்டார். கந்த சஷ்டி விழா நடைபெறும் ஆறு நாள்களும் தருமபுரம் ஆதீனகர்த்தர் திருச்செந்தூரில் தங்கி உண்ணா நோன்பு, உரையா நோன்பு இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்ய உள்ளார். ஞான ரத யாத்திரையாக புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு வழியெங்கும் பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர்.
No comments