Breaking News

சபாநாயகர் தலைமையில் மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம்.


மணவெளி சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணி கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் டி என் பாளையம் பகுதியில் தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் வருவாய் துறை ஆகிய அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் ஆர் தலைமையில் 13.11.2024 காலை புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், வருவாய் துறை தாசில்தார் பிரிதிவி, செயற் பொறியாளர்கள் சந்திரகுமார், உமாபதி, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் கோபி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர்கள் சரவணன், நடராஜன், அகிலன், சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் பூரணாங்குப்பம் முதல் நல்வாடு வரையிலும் தவளக்குப்பம் முதல் நல்லவாடு வரையிலும் பூரணாங்குப்பம் முதல் நல்லவாடு ரோடு வரை உள்ள கல்லூரி இணைப்பு சாலை நல்லவாடு ரோடு முதல் கொறக்கமேடு வரை உள்ள கல்லறை ரோடு ஆகிய சாலைகளை தார் சாலையாக அமைத்தல், இடையார்பாளையம் பகுதியில் ஜலகண்டேஸ்வரர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகள் ஞானமேடு பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகள் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் ஏற்படுத்துதல் டி என் பாளையம் பகுதியில் புதிய தடுப்பணை அமைத்தல் மற்றும் பெருமாள் நகர் பாகூர் சாலை உடையார் வீதி ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலை அமைத்தல் புது குப்பம் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் அனைத்து சாலைகளையும் கழிவுநீர் வாய்க்கால் வசதிகள் கூடிய சிமெண்ட் சாலையாக அமைத்தல் மணவெளி பகுதியில் மணவெளி முதல் சின்ன வீராம்பட்டினம் வரை உள்ள பிரதான சாலை அமைத்தல் நோணாங்குப்பம் பகுதியில் ஆற்றங்கரை சாலை கழிவு நீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் குறித்தும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் மற்றும் தொடங்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் சட்டப்பேரவை தலைவர் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.

No comments

Copying is disabled on this page!