Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் கல்லறை தினம் அனுசரிப்பு ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை.


உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் அனைத்து ஆத்மாக்களின் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது குடும்பத்தினர், உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று, அவற்றை சுத்தப்படுத்துவர். பின்னர் கல்லறைகளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்வது வழக்கம். மேலும் கல்லறை திருநாளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

இந்த நிலையில் இன்று கல்லறை திருநாளையொட்டி  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் புனித அன்னை தேவாலயத்தில்  சிறப்பு பிரார்த்தனை  நடந்தது. பின்னர் கல்லறை தோட்டத்தில் பங்கு தந்தை  தலைமையில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இறந்த தங்களது குடும்பத்தினர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை மலர்களால் அலங்கரித்தனர். மேலும் கல்லறைகள் மீது மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

No comments

Copying is disabled on this page!