வேலூர் மாவட்டம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு பொது சட்டமன்ற பேரவை நிறுவனங்கள் குழுத் தலைவர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு திட்ட குழு தலைவர் அணைக்கட்டும் மேற்கு ஒன்றிய செயலாளர் மு. பாபு மாலதி மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் மாவட்ட கோட்டாட்சியர் கோ. குமரன் பாண்டியன் அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் அணைக்கட்டு மத்திய செயலாளர் ஞானசேகரன் வேலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன் பிரகாஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேண்டா தாசில்தார் மற்றும் அணைக்கட்டு ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments