ரூ.35.36 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை முதலமைச்சர் ரங்கசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அர்ப்பணித்தார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட் சுதானா நகரில் ரூ.35.36 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, 10 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு நீர் உந்துக் குழாய்கள், நீர்பங்கீட்டு குழாய்கள் மோட்டார் பம்ப்செட்டுகள், 7182 புதிய குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு நீர்த்தேக்க தொட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் உடன் சபாநாயகர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத், அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி, பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயந்த்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன். கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் சுந்தரி, இளநிலை பொறியாளர் தணிகைவேல் மற்றும் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் தொகுதி முக்கிய பிரமுகர்கள் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments