15 ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணியினை முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் 15 ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் அமைக்க சென்னை ஸ்கைராம்ஸ் அவுட்டோர் அட்வர்டைசிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திடம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதையொட்டி ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணியின் துவக்க விழா தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் இன்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், துணை போக்குவரத்து ஆணையர் குமரன், வட்டார போக்குவரத்து அதிகாரி சீத்தாராம ராஜ் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments