மற்ற கட்சிகளை சந்தோஷப்படுத்துவதற்காக தன் கட்சியின் கோட்பாடுகளை கொடுக்க முடியாது:- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி:-
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர் சந்திப்பு |
மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் திருமண நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
சம்பா, தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் தாமதமாக தொடங்கியுள்ளதால், பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்கான இறுதி தேதியை நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். பயிர்க்கடன் வாங்க, பயிர்க் காப்பீடு செய்ய, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய என 3 முறை சிட்டா அடங்கல் வாங்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனை ஒருமுறை மட்டுமே பெற்றால் போதும் என்ற நிலையை விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் அரசு ஏற்படுத்த வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவை தண்ணீர் ஏற்கனவே பாக்கி இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டுமோ அதனை உடனடியாக கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும், தவெக தலைவர் தன்னுடைய புதிய கட்சி, அதன் கோட்பாடுகள், வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட முடியுமே தவிர மற்ற கட்சிகளை சந்தோஷப்படுத்துவதற்காக தன் கட்சியின் கோட்பாடுகளை கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அக்கட்சியின் வருங்கால செயல்பாடுகள், மக்கள் பணி இவற்றையெல்லாம் வைத்துதான் கணிக்க முடியும். பொறுத்திருந்து பார்ப்பதுதான் விவேகமான அரசியலாக இருக்க முடியும். தமிழக வெற்றிக் கழகம் டெல்லியில் இருக்கக் கூடிய கட்சிக்கோ, தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிக்கோ பி டீமாக தெரியவில்லை. தன்னுடைய கட்சியை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இருட்டில் பயத்தின் அடிப்படையில் பாடுவது போல குற்றஞ்சாட்டுவது ஏற்கத்தக்கதல்ல. மக்கள் அதுபோன்றவர்களை சரியாக கணிப்பார்கள் என்றார்.
No comments