Breaking News

நிம்மேலி கிராமத்தில் மயான கொட்டகை இல்லாததால் சொந்த செலவில் தற்காலிக கீற்றுக் கொட்டகை அமைத்து பிரேதத்தை தகனம் செய்த அவலம்..

 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழ சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன நிம்மேலி கிராமத்தில் கடந்த சில வருடங்களாக இறந்தவர்களை தகனம் செய்ய மயான கொட்டகை இல்லாமல் திறந்த வெளியில் உடலை தகனம் செய்வதில் கிராம மக்கள் சிரமம் அடைந்து வந்துள்ளனர், இதுகுறித்து சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் உடலை தகனம் செய்ய முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர், இந்த நிலையில் சின்ன நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசு(65) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் அவரை அடக்கம் செய்வதற்கு மயான கொட்டகை இல்லாததால் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக கிராம மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கிராம மக்கள் வசூல் செய்து சொந்த செலவில் தற்காலிக கீற்றுக் கொட்டகை அமைத்து அதில் உடலை தகனம் செய்துள்ளனர், இறந்தவரின் இறுதி சடங்கையும் அதிலே செய்துள்ளனர், உடனடியாக தமிழக அரசு சின்ன நிம்மேலி கிராமத்திற்கு மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!