புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 10 மாதங்களுக்கு பிறகு, வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கி வந்தது. அதிக கட்டணம் காரணமாகபொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல்இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க புதுச்சேரி அரசு பல்வேறு விமான நிருவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கு விமானங்களை இயக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளதாக விமான நிலையை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இண்டிகோ நிறுவனம் 72 பேர் பயணிக்க கூடிய (ATR-72) சிறிய ரக விமானசேவையை வருகின்ற டிசம்பர் 20ம் தேதி முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. காலை 11.10
மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் விமானம், பகல் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் எனவும், பின்னர் புதுச்சேரியில் இருந்து 12.45 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
No comments