சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஐ எம் ஏ சார்பாக தற்போது போராட்டமான அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை குறித்து இந்திய மருத்துவர் சங்கங்களில் மாநிலத் தலைவர் டாக்டர் அபுல் ஹாசன் கூறுகையில், மருத்துவமனை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்படாவிட்டால் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்ற எண்ணத்திலே நாங்கள் எங்களது கண்டனங்களை தீவிரமாக பதிவு செய்து கொள்கிறோம் இன்றைக்கு இந்த படுகொலையை இந்த தாக்குதலை கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் அந்த வகையில் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை இந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும் இந்த தாக்குதலை கண்டித்தும் டாக்டர் பாலாஜி அவர்களுக்கு தாக்கப்பட்டதற்கு நீதி வேண்டிய இப்போது முதல் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.
அந்த வகையில் தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்கத்தின் கிளைகள் உள்ள சுமார் 45 ஆயிரம் மருத்துவர்களும் சுமார் 8,000 மருத்துவமனைகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம் இந்த வேலை நிறுத்தமானது இப்பொழுது ஆறு மணியிலிருந்து இன்றைக்கு 6:00 மணியிலிருந்து நாளை மாலை 6 மணி வரை நடந்த படம் வெளி நோயாளிகள் மற்றும் அவசரம் இல்லாத சிகிச்சைகள் நிறுத்தப்படும் அவசர சிகிச்சைகள் மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் மூலமாக நாங்கள் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வைக்கிறோம்.
ஒன்று இந்த தாக்குதல் நடத்திய நபருக்கு ஒரு விசேஷ சட்டம் படி அதாவது ஆக்ட் 48 2008 என்ற சட்டப்பிரிவின்படி வழக்கில் பதிவு செய்யப்பட்டு தண்டனைகள் பெற்று தர வேண்டும் இரண்டாவது அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்து மருத்துவமனைகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் அப்படி என்று சொன்னால் மருத்துவமனைகளில் ஒரு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் அவர்கள் அதிகமாக மருத்துவமனைக்குள் நுழைகின்ற மக்களை கண்காணித்து அவர்களுக்கு அந்த என்ட்ரி நுழைவை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்வார்கள் இதன் மூலம் ஆயுதங்கள் மருத்துவமனையில் கொண்டு வருவதும் சமூக விரோதிகள் உள்ளே நுழைவதும் தடுக்கப்படும் மூன்றாவதாக நாங்கள் நமது அரசாங்கத்தை கேட்டுக் கொள்வது தனியார் மருத்துவமனைகள் அந்த தமிழக மருத்துவமனைகள் பதிவு சட்டத்தின் கீழே மூடப்படுகின்ற செயல்கள் இப்பொழுது அதிகமாக நடந்து வருகின்ற காரணத்தினால் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்படுகிறது.
புதிதாக தனியார் மருத்துவமனைகள் தொடங்குவதும் இப்பொழுது நடைபெறவில்லை ஆகவே தனியார் மருத்துவமனைகள் அதிகமாக இருந்தால் தான் அரசு மருத்துவமனைகளிலே கூட்டம் ஒரு சாதாரணமாக இருக்கும் இல்லாவிட்டால் அரசு மருத்துவமனைக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் சிவகாசி கருத்தில் கொண்டு தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளை அச்சுறுத்துவதும் ஒடுக்குவதும் செய்யக்கூடாது என்று இந்த நேரத்தில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் அது தவிர மக்கள் கோபப்படும்படி எதனால் மக்கள் கோபப்படுகிறார்கள் என்று சொன்னால் மருத்துவமனைகளிலே டாக்டர்களை பார்ப்பதற்கு காலதாமம் ஏற்படுகிறது சில பரிசோதனைகள் இல்லாமல் இருக்கிறது டாக்டர்கள் அதிகம் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆகவே இந்த குறைகள் எல்லாம் ஓகே அதிகமான மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் அரசு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் எந்தவித காலதாமதம் இல்லாமல் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அது அடிப்படை வசதிகளையும் பெருக்க வேண்டும் என்ற இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறோம். எங்களது போராட்டம் இந்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும் நிறைவேற்றப்படாவிட்டால் அது குறித்து மேற்கு என நடவடிக்கை என்ன என்பதை ஆலோசிக்கப்படும் என்று இவ்வாறு அவர் கூறினார்.
No comments