Breaking News

உளுந்தூர்பேட்டை கிளியூர் கிராமத்தில் காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வெளியில் சிக்கி பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி சரத்குமார் 27 இவர் அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு பூ பறிப்பதற்காக சென்றபோது வழியில் கிளியானந்தன் என்ற விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிக்காக மிண்வெளி அமைக்கப்பட்டிருந்தன அப்போது இதனை அறியாமல் சென்ற பூ வியாபாரி சரத்குமார் மின்வெளியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மின்சார வேலி அமைத்த விவசாயி இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!