ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மாணிக்க பங்கு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது தற்பொழுது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கால்நடைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது மேலும் கால்நடைகளுக்கான மருந்துகளும் வழங்கப்பட்டது முகாம் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா மற்றும் மாணிக்க பங்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் முன்னிலையில் நடைபெற்றது இதில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தலைமையில் மருத்துவர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு மருந்துகள் வழங்கினார்.
மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கால்நடை வளர்ப்போர் உரிமையாளர்களுக்கு மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது இந்நிலையில் மாணிக்க பங்கு ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments