தேசிய தத்தெடுப்பு மாதத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி..
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் "தேசிய தத்தெடுப்பு மாதம் 2024" காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பொறுப்பு இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் குலோத்தங்கன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தத்தெடுத்தல் மூலம் வயதான குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்தல் என்பதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மத்திய தத்து வள ஆதார மையம் துணை இயக்குனர் ரிச்சா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரியா, தத்தெடுப்பு பற்றிய முக்கிய குறிப்புகளை வழங்கினர்.
இதில் குழந்தைகளை தத்தெடுக்க போகும் பெற்றோர்களும், தத்தெடுத்த பெற்றோர்களும் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் பங்கு பெற்று நடைமுறை குறித்த அனுபவங்களை பகிர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
No comments