என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் அனைத்து தொகுதிகளிலும் நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் என்.எஸ் ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநிலம் மற்றும் தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது, இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாயிகள் அணி உட்பட பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ரங்கசாமி முதல்வராக்க தீவிரமாக பணி செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments