விபத்தில் காயமடைந்தவரின் அலட்சியமாக தொடர் சிகிச்சைக்கு செல்லாத்தால் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் அவர்களுக்கு இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சமாளித்துக் கொண்டு அதே பைக்கில் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர், பின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர், ஆனால் அவர்கள் மேல் சிகிச்சைக்கு செல்லாமல் அலட்சியமாக தங்கள் வேலை செய்யும் வாட்டர் சர்வீஸ் கடைக்கு சென்று விட்டனர்.
மறுநாள் காலையில் மதன்பாண்டி சஞ்சயை எழுப்பிய போது அவர் மயக்க நிலையில் கிடந்தார், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சஞ்சயை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார். இறந்த சஞ்சையின் உடல் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது, இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments