தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்பில் வணிகர்களுடனான ஆலோசனை.
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ளன இதனால் புதுச்சேரியின் முக்கிய வணிக வீதியான நேரு வீதி காந்திவீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதுச்சேரி போக்குவரத்துகாவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி போக்குவரத்து துறை காவலர்கள் மற்றும் வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பண்டிகை காலங்களில் வணிக வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறையினர் வணிகர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர் தொடர்ந்து வணிகர்கள் தங்களின் பல்வேறு பிரச்சனைகள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட ஒரு செடியை சேர்ந்த ஏராளமான வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments