குத்தாலம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் குத்தாலம் துணைமின் நிலையத்தில் மிண் இணைப்பை சரி செய்யாமல் ஊழியர்கள் மதுபோதையில் உறங்கியதாக குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் உள்ளது. குத்தாலம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு மின்விநியோகம்’ செய்யப்படுகிறது. இந்நிலையில் குத்தாலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நேற்று இரவு மின்சாரம் தடைபட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராத நிலையில் குத்தாலம் பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பலமுறை கால் செய்தும் அவர்கள் பொதுமக்களின் அழைப்பை ஏற்கவில்லை. இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் குத்தாலம் துணை மின் நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது இரண்டு ஊழியர்கள் மது அருந்திவிட்டு ஆடை நழுவியது கூட தெரியாமல் அலுவலகத்தில் உள்ளே படுத்து உறங்கியதாக குற்றம்சாட்டி ஊழியர்களை எழுப்பி மின்நிறுத்தம் குறித்து தெரிவித்து அதனை சரி செய்ய கூறி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள மின்சாரத்துறை அதிகாரிகள் பணியில் மெத்தனமாக செயல்பட்டதற்காக விளக்கம் கேட்டு மின்சார ஆய்வாளர் கண்ணன், கேங்மேன் கங்காதரன் ஆகியோருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments