சீர்காழி அருகே ஓலையாம்புத்தூர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்திலிருந்த கம்பளி பூச்சிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அழிக்கப்பட்டது பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் கொண்டத்தூர் ஓலையாம்புத்தூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள புங்கன் மரங்களில் மழையின் காரணமாக கம்பளி பூச்சி அதிக அளவில் உற்பத்தியாகி பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததை அறிந்து தலைமை ஆசிரியரால் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று பூச்சிகளை உடனடியாக அழித்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பாபு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினர் விரைந்து பள்ளிக்கு சென்றனர். பூச்சிகளை அழித்திட பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துதான் அழிக்க முடியும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது சுவாசப் பிரச்சனை ஏற்படும் என கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு தீயணைப்பு துறையினர் பூச்சிக்கொல்லியை தெளித்து பள்ளி வளாக மரங்களில் இருந்த அனைத்து கம்பளி பூச்சிகளையும் அழித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் விரைந்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
No comments