மீஞ்சூர் அருகே 100நாள் வேலை வழங்க வலியுறுத்தி பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக 100நாள் வேலை வழங்குவதில்லை எனக்கூறி பெண்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி 100நாள் வேலை வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைந்த நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக பெண்கள் தெரிவித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் உண்மையான பயன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் அப்போது புகார் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக மீஞ்சூர் பிடிஓ அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது
No comments