டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் மற்றும் வென் கோல் தினம் கொண்டாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கோட்டை மருதூர் கிராமத்தில் செயல்படும் தாய் மனசு விழி இழந்தோர் சங்கம் மற்றும் மணலூர்பேட்டை அரிமா சங்கத்தின் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் மற்றும் கண் பார்வை இழந்தோருக்கான வென் கோல் தின நிகழ்ச்சியை முன்னிட்டு மனம்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பார்வை இழந்தவர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டு அவர்களுக்கு நடப்பதற்கு வென் கோல் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று அதன் பின்பு ஊர்வலமாக நடந்து கண்பார்வை அற்றவர் கௌரவமாகவும் மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று பேரணியாக சென்றனர்.
மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து சேர்ந்தனர் அவர்களை கௌரவிக்க வண்ணமாக அவர்களுக்கு வென் கோல் மற்றும் தேனீர் பிஸ்கட் தண்ணீர் பாட்டில் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் தாய் மனசு விழி இழந்தோர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் மணலூர் பேட்டை அரிமா சங்கத்தின் தலைவர் சரவணன் மற்றும் முன்னாள் தலைவர் அரிமா முருகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
No comments