திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டும் உக்கர ரத சாந்தி விழா...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரரர் ஆகிய மூவராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அட்டவிரட்ட தலங்களில் ஒன்றான இக்கோவில் காலசம்கார மூர்த்தி உற்சவராக அருள் பாலித்து வருவது சிறப்பம்சமாகும். இந்த கோவிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி வழிபாடு செய்து வருகிறார்கள். மணி விழா, சதாபிஷேகம், மற்றும் ஆயில் ஹோமம் உள்ளிட்டவற்றை இங்கு நடத்துவது ஐஸ்வர்யங்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிலையில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிக்கு ஜென்ம நட்சத்திரம் மற்றும் 60 வயது தொடக்கத்தை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிக்கு உக்கர ரத சாந்தி பூஜை நடைபெற்றது. கோவிலுக்கு வந்த தருமபுர ஆதீனத்திற்கு குருக்கள் மற்றும் நிர்வாகத்தினர் பூரணகும்பம் மரியாதை செய்து மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்றனர். மேலும் பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்றனர். பின்னர் கோபூஜை, கஜ பூஜை செய்த தருமபுர ஆதீனம் சங்கு மண்டபத்தில் உக்ர ரத சாந்தி பூஜை நடைபெற்றது. கால சம்ஹார மூர்த்தி எழுந்தருள செய்யப்பட்டு 16 கலசங்கள் 108 சங்குகளில் புனித நீர் ஊற்றி கணபதி, நவகிரக, ஆயுஷ், தன்வந்திரி, சுதர்சன மகாலட்சுமி, அஷ்டலட்சுமி, நட்சத்திர சாந்தி ஹோமங்கள் செய்யப்பட்டு தருமபுர ஆதீனத்திற்கு தட்சிணாமூர்த்தி சன்னதியில் கலாசபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்கார மூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிக்கு சென்று ஆதீனம் தரிசனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை குருக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர் மேலும் தருமபுரம் ஆதீனத்திற்கு வெள்ளி வீரவால் பாலாஜி குருக்கள் வழங்கினார் பக்தர்கள் திரண்டு ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.
No comments