Breaking News

ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை சீரமைத்து தெப்பக்குளம் திருவிழாவை நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


உளுந்தூர்பேட்டை தாலுகா பூ.மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை சீரமைத்து தெப்பக்குளம் திருவிழாவை நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமையான அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோவிலின் அருகில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தெப்பக்குளம் உள்ளது இந்தக் குளத்திதை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தூய்மையாக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்ததோடு அந்த குளத்தில் ஆண்டுதோறும் தெப்ப திருவிழாவும் நடைபெற்று வந்தது இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த இந்த குளத்தில் அருகில் உள்ள பள்ளியை சேர்ந்த 4 குழந்தைகள் குளிப்பதற்காக வந்த பொழுது தவறி விழுந்து உயிரிழந்தனர்.

இந்த குளத்தை சரிவர பராமரிக்காததாலும் சுற்று வேலி அமைக்காததாலும் பள்ளி குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியில் தெப்ப திருவிழா நின்றதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் இந்த குளத்தை சீரமைத்து குளத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து பராமரிப்பதோடு ஆதிகேசவ பெருமாள் கோவில் திருவிழாவை ஒட்டி மீண்டும் தெப்ப திருவிழாவை நடத்த வேண்டும் என்று பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!