தேனி மாவட்டம் போடியில் சித்தர் பீட சிலைகள் திருட்டு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், ரங்கநாதபுரம், யோகிதா நகரில் அமைந்தரிருத்த ஸ்ரீ பாலாம்பிகை சித்தர் போகர் குரு தவ பீடத்தில் இருந்த விநாயகர் சிலை மற்றும் 3. 1/2 அடி உயரம் கொண்ட பழநி ஸ்ரீ போகர் சித்தர் திரு உருவ சிலை இரண்டு நாகர் சிலைகள் மற்றும் 4 அடி திரு உருவ புகைப்படங்கள் வலம்புரி சங்கு மற்றும் இதர பூஜை பொருள்களை 17.09.2024 அன்று அதிகாலையில் வெள்ளை நிற வண்டியில் சிலருடன் திருடபடும் பொது கோயிலுக்கு வரும் பக்கத்தர்கள் சிலர் அதனை பார்த்து கோயில் பூசாரி வீரபத்திரகுமார சாமியிடம் தெரிவிக்க அவர் வெளியூர் சென்றிருந்ததால். கோயில் நிருவனர் கிஷோர்குமாரிடம் தகவல் தெரிவித்த நிலையில் அவரும் வெளியூர் சென்றிருந்ததால் அவசர உதவி - 100க்கு அழைத்து தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்க்கு காவல் அதிகாரிகள் வந்து விசாரித்ததில் சிலைகள் திருடப்பட்டதும் அதற்கு சிவக்குமார் இடத்தின் உரிமையாளர் என்பது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் நடந்து கடந்த ஒருவாரகாலம் ஆனா நிலையில் இந்த திருட்டு சம்பவம் ஆர்பி என்கின்ற ரைஸ் புல்லிங் எனப்படும் பணம் சம்பாதிக்கும் மோசடி கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் எனவும், இடத்தின் முன்னால் உரிமையாளர் இதில் பணத்திற்காக கடத்தல் முயற்சியில் ஈடுப்படுருக்காலாம் மேலும் போடி ரங்கநாதபுரத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சிலர் மீது இந்த கோயில் நிர்வாக தலைவர் கிஷோர்குமார் போடி புறநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments