ஈரோட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்த்து போராடிய வழக்கின் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் விடுதலை!
இப்போராட்டத்திற்கு ஆதரவு கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை.முபாரக் அவர்களை மாநில தலைமையகத்தில் தற்சார்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கி.வெ.பொன்னையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் தோழர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சி தனது முழு ஆதரவை அளிப்பதாகவும், போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள் எனவும் மாநிலத் தலைவர் உறுதியளித்தை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நடைபெற்ற போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
அதனடிப்படையில் ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவரும் உயர்மின் கோபுர எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் முனுசாமி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், கோவை மண்டல செயலாளருமான ப.முகமது லுக்மானுல் ஹக்கீம், ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் தலைவர் அபூபக்கர் சித்தீக், ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர், எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 43 பேர் மீது காவல்துறை பொய் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (JM-3) நடைபெற்ற வந்த நிலையில் நேற்று (19.10.2020) குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என நீதிபதி தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.
விவசாயிகளின் உரிமைக்கான இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், வழக்கை திறம்பட வாதிட்டு விடுதலை பெற்றுத்தந்த வழக்கறிஞர்கள் சந்திரசேகர், பிரவீன் ஆகியோருக்கும் விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் நன்றிகளை தெரிவித்தனர்.
No comments