Breaking News

ஆசிரியர்கள் மாணவர்களை படைப்பாளிகளாக, புதிய கண்டுபிடிப்பாளர்களாக பிரச்சனையை தீர்க்க கூடியவர்களாக உருவாக்க வேண்டும்: மயிலாடுதுறையில் ஆசிரியர்களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 3.0 பயிற்சி முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் அறிவுரை:-


 

   மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி இன்ஜினியரிங் கல்லூரியில் தமிழ்நாடு மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், யூனிசெப் (UNICEF) நிறுவனம், பள்ளி கல்வித்துறை இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 3.0 குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 72 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையேற்று தொடங்கி வைத்து சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் அறிவியல், தொழில்துறை வளர்ச்சி முன்னேற்றமடைந்துள்ள நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களை படைப்பாளிகளாக, புதிய கண்டுபிடிப்பாளர்களாக பிரச்சனையை தீர்க்க கூடியவர்களாக உருவாக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்றும் கிடையாது. உலக அளவில் சாதித்த அறிவியல் அறிஞர்களான தாமஸ்ஆல்வாய் எடிசன், சர்.சி.வி ராமன் அப்துல்கலாம் போன்றவர்களை உதாரணமாக எடுத்துக்காட்டி குழந்தைகளின் திறமைகளை ஆசிரியர்கள் வெளிக்கொண்டு வந்து அரசு ஏற்படுத்தி தந்துள்ள என்னற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள மாணவர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் மனதில் நேர்மறை எணணங்களை விதைத்து நம்பிக்கை உள்ள மனிதர்களாக மாற்றி வாழ்க்கையில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் சிம்ரின் பானு, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் காமராஜ் ஆகியோர் மாணவர்களிடம் புத்தாக்கத்தை உருவாக்கி விழிப்புணர்வு எற்படுத்தி மாணவர்களின் திறமையை கண்காணித்து சிறப்பூட்டி திறமைக்கு தகுந்தவாறு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். கடந்த ஆண்டு மாவட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் சிறந்த கண்டுபிடிப்புகளை படைத்ததற்காக இரண்டு பள்ளிகள் வெற்றி பெற்று தலா ரூபாய் 10 ஆயிரம் பரிசுதொகை பெற்றுள்ளது. வருகின்ற 18ஆம் தேதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெகன்நாதன். கல்லூரி இயக்குநர் செந்தில் முருகன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!