வேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல திட்ட பணிமுகாம்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் நிர்வாகி ஸ்ரீ ராமகிருஷ்ணா பெல் தலைமை தாங்கினார் இதில் அருட்செல்வம் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் இளையராஜா வரவேற்புரை வழங்கினார், இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழாவை ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
தொடக்க விழாவை பொது மாவட்ட தொடர்பு அலுவலர் அற்புதராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் கருணாநிதி சிறப்புரையாற்றினார் பின்னர் இந்நிகழ்ச்சியில் வேதியல் ஆசிரியர் முரளிதரன் வணிகவியல் ஆசிரியர் தனசேகர் மற்றும் கணினி ஆசிரியர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் உதவி திட்ட அலுவலர் நித்திய பாபு நன்று உரை வழங்கினார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments