ஜோலார்பேட்டையில் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணியளவில் ஜோலார்பேட்டை வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், இனியன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், ஆகிய பகுதியிலிருந்து 150க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை, மற்றும் தேசிய அடையாள அட்டை, உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உபகரணம், வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை செய்து தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படும். உடன் மருத்துவ குழுவினர் மற்றும் வட்டார வளமைய அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments