சிவகங்கை மாவட்டத்தில் காவலர் வீர வணக்க நாள்!
சிவகங்கை மாவட்ட சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியில் இருந்த போது இறந்த சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கரலிங்கம் மற்றும் ஆல்வின் சுதன் இருவரின் நினைவாக நினைவுத் தூணை முழுமையாக காவலர்களை வைத்து கட்டி முடிக்கப்பட்டது சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக நினைவுத்துண் கட்டப்பட்டு நடைபெறும் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் 21 குண்டுகள் முழங்க மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி உட்பட பலரும் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இறந்த காவலர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு நினைவிடத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்திய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
No comments