Breaking News

கோவில்பட்டி அருகே குட்டை போல தேங்கி இருக்கும் கழிவு நீர் - தொற்று நோய்களால் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குட்டை போல தேங்கி இருக்கும் கழிவு நீர் - தொற்று நோய்களால் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள், ஆக்கிரமிப்பு காரணமாக கழிவு நீர் செல்ல வழியில்லை என்பதால் துர்நாற்றத்துடன் கோவில்பட்டி அருகே அவதிப்பட்டு வரும் கிராம மக்கள், பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் வேதனை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது ஜமீன் தேவர்குளம். இந்த கிராமத்தில் உள்ள வடக்கு தெரு பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது மட்டுமின்றி, அங்கு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள காரணத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முடியாமல் கடந்த சில மாதங்களாக குட்டை போல் தேங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கழிவு நீர் குட்டை போல் தேங்கி இருப்பதால் அந்த தெரு வழியாக மக்கள்,, முதியவர்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது, சுற்றி தான் மக்கள் சென்று வருகின்றனர். கழிவு நீர் குட்டை போல தேங்கி இருப்பதால், அதிகமாக துர்நாற்றம் வீசி வருவது மட்டுமின்றி, கொசு தொல்லையும் அதிகரித்திருப்பதாகவும், குழந்தைகளுக்கு பல விதமான தொற்று நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். 

ஆக்கிரமிப்புகளை அகற்றி வாருகால் அமைத்து கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ந்து மனு கொடுத்து வருவதாகவும், ஆனால் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களை அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ கூட வர முடியாத நிலை உள்ளது, துர்நாற்றம் வீசுவதால் சாப்பிட கூட முடியவில்லை, முதியவர்கள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, குட்டை போல் தேங்கி இருக்கும் கழிவுநரை முழுமையாக அகற்றுவது மட்டுமின்றி, தங்கு தடை இன்றி கழிவுநீர் செல்ல வாறுகால்  அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!