மானாமதுரை அருகே அரசு பள்ளி மாணவ மாணவர்கள் நடத்திய அசத்தலான அறிவியல் கண்காட்சி மற்றும் உணவு திருவிழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளிக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். இதில் மாணவ மாணவியர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.
அதில் பழைய டப்பா செம்பை வைத்து செய்யப்பட்ட ஏர் கூலர், அட்டைப்பெட்டியில் செய்யப்பட்ட நுண்ணோக்கி, காற்றாலை இயந்திரம், பேட்டரி லைட், சோலார் லைட், மனித உடல் உறுப்புகள் பற்றியும் விளக்கமளித்துடன் அத்துடன் உணவு திருவிழாவில் மாணவர்கள் தங்கள் கிராமங்களில் கிடைக்கும் பொருட்களை வைத்து சமைத்துக் கொண்டு வந்திருந்தனர் அதில் கம்மங்கூழ், கேப்பகூழ், புட்டு, சுண்டல், கேசரி, குலோப் ஜாமுன், பிரியாணி, வரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், கொள்ளு , போன்ற தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளை காட்சி படுத்தினார்கள். இதனை பார்வையிட்ட ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகளின் திறமையை வெகுவாக பாராட்டியதால் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்தனர்.
No comments