பாக்குமுடையான்பேட் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி..
பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் குலசேகரன் கலந்துகொண்டு கண்காட்சி திறந்து வைத்தார். மேலும் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு மாணவ மாணவிகளை வெகுவாக பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, கைவினை கண்காட்சி, பழங்கால பொருட்கள் கண்காட்சி மற்றும் பெற்றோர்களின் சத்துணவு உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தேஷ்ணா அறக்கட்டளையின் நிறுவன ர் அமலா மற்றும் அவரது குழுவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை ஆர்வமுடன் பார்த்து பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments